துபாய் பயணத்தின்போது 6,100 கோடி ரூபாய் முதலீட்டில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையின்படி தொழில் வளிர்ச்சிக்கான கொள்கைகள், ஒற்றைச்சாளர முறையில் அனுமதி ஆகியவற்றை அரசு நிறைவேற்றி வருவதாக கூறினார்.
மேலும், 68,375 கோடி ரூபாய் முதலீட்டில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக கூறிய அவர், “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சி மூலம் 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தூத்துக்குடியில் சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியபோது 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறிய முதலமைச்சர், துபாய் மற்றும் அபுதாபி பயணத்தின்போது 6,100 கோடி ரூபாய் முதலீட்டில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ‘உதயமானது நியூஸ் 7 தமிழ் அக்ரி யூட்யூப் சேனல்’
மேலும், முதலீடுகள், வேலைவாய்ப்பை கண்காணிக்க விரைவில் பணிக்குழு அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், முதலீடுகளை ஈர்த்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவே துபாய் சென்றதாக குறிப்பிட்டார். நேரடி அந்நிய முதலீடு 41.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2023ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: