மீனா முத்தையா மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…!

செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;

செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் திருமிகு மீனா முத்தையா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கலைச்சேவை, கல்விச் சேவை இரண்டையும் தமது வாழ்வின் இருபெரும் இலட்சியங்களாகக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர் திருமிகு மீனா முத்தையா அவர்கள்.
தஞ்சாவூர்க் கலைக்குப் புத்துயிர் கொடுத்து, அதற்காகவே குமார ராஜா முத்தையா கலை மற்றும் கைவினைக் கலைப் பள்ளியின் மூலம் பயிற்சியும் அளித்து வந்த அவரது பணிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்.
தனிப்பட்ட முறையிலும் எங்களது குடும்பத்துடன் இனிய நட்புறவைப் பேணி வந்த அவர், எனது துணைவியாரின் நூல் வெளியீட்டு விழாவிலும் 2018-ஆம் கலந்துகொண்டு உரையாற்றியதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
திருமிகு மீனா முத்தையா அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.