முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் பொது இடங்களில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

மதுரை கூடல் நகரில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு காரணமாக தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் அருகே மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மூட்டை மூட்டையாக பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளனர். ரயில் நிலையம் அருகே இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் கொட்டி சென்றதாக புகார் மேலெழுந்துள்ளது.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும் பணி: திமுக தீவிரம்!

Jeba Arul Robinson

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

பேச்சுவார்த்தை தோல்வி…. 41வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!

Nandhakumar