படப்பிடிப்பில் நடந்த சண்டைக்காட்சியின் போது நடந்த விபத்தில் நடிகர் விஷால் படுகாயமடைந்தார்.
நடிகர் விஷால், ’எனிமி’படத்தை முடித்துவிட்டு, இப்போது து.ப.சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ‘விஷால் 31’ என்று தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நாயகியாக டிம்பில் ஹயாத்தி நடிக்கிறார்.
மலையாள நடிகர், பாபுராஜ் வில்லானாக நடிக்கிறார். யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். பாலசுப்பிரமணியென் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஷாலில் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. பாபுராஜுடன் விஷால் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. அப்பேது பாபுராஜ் தள்ளுவது போலவும் விஷால் தாவி சென்று விழுவதுபோலவு காட்சி. இதில் விஷாலின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
Actor #Vishal got severe back injury at #Vishal31 shooting spot, Hyderabad. While performing the climax stunt sequence, his back got injured severely like last time, Varma Therapist took care of the treatment
— Vishal Film Factory (@VffVishal) July 21, 2021
இதையடுத்து படப்பிடிப்பில் இருந்து பிசியோதெரபிஸ்ட் வர்மா, உனடியாக விஷாலுக்கு சிகிச்சை அளித்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் மீண்டும் படப் பிடிப்பில் கலந்துகொண்டார். அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் அறிவுரை கூறியுள்ளார்.







