முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி

சமீப காலங்கலாக ஐந்து பைசாவுக்கு பிரியாணி, 10 பைசாவுக்கு பிரியாணி என செல்லாக்காசுகளுக்கு பிரியாணி வழங்கும் முறை தீவிரமடைந்து வருகிறது. பெரும்பாலும், புதிதாக திறக்கப்படும் உணவகங்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகின்றன. விளம்பரத்திற்காகவே இது நடைமுறையில் பின்பற்றபடுகிறது.

அந்த வகையில், மதுரை செல்லூர் பகுதியில் அசைவ உணவகம் ஒன்றை இன்று திறக்கப்பட்டது. முன்னதாக இந்த உணவகத்திற்கு விளம்பரம் தேடும் நோக்கோடு முதல் நாளான இன்று பிரியாணி வாங்க வரும் முதல் 100 நபர்களுக்கு 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து காலை முதல் நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழைய ஐந்து பைசா உடன் காத்திருந்தனர்,இருப்பினும் குறைந்த அளவே பிரியாணி இருந்த காரணத்தால் நூற்றுக்கும் குறைவான பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டதால் மீதமுள்ள பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement:

Related posts

கோவின் இணையதளத்தில் 2 நாட்களில் தமிழ்: மத்திய அரசு உறுதி

Halley karthi

12ம் வகுப்புத் தேர்வில் மாற்றம்: தேர்வுகள் இயக்ககம்!

Ezhilarasan

மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்ட எண்ணத்தில் செயல்படுகிறார்- சரத்குமார்!

Saravana