மதுரை காப்பகத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை

மதுரை காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. மதுரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கொரோனா உட்பட 14 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்…

மதுரை காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மதுரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கொரோனா உட்பட 14 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 2 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

மதுரையில் இதயம் ட்ரஸ்ட் என்ற காப்பகத்தில் இருந்து மணிகண்டன் என்ற ஒரு வயது குழந்தை கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக போலி ஆவணம் தயாரித்து, காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் விற்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் மதுரை ஆட்சியரிடம் புகாரளித்தார்.

ஆட்சியர் உத்தரவின் பேரில், போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது தனம் என்ற மற்றொரு குழந்தையும் மாயமானதை கண்டுபிடித்தனர். கடும் விசாரணைக்குப் பிறகு, குழந்தைகள் மணிகண்டன் மற்றும் தனம் ஆகியோர் விற்கப்பட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் அதிரடியாக மீட்டனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகி மதார்ஷா ஆகியோரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீட்கப்பட்ட இரு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறி, அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா உள்ளிட்ட 14 விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது . இன்னும் சற்று நேரத்தில் இரண்டு குழந்தைகளையும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.