ஓம் பிரகாஷ் சவுதாலா விடுதலை

ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா டெல்லி திகார் சிறையிலிருந்து இன்று விடுதலைச் செய்யப்பட்டார். ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல் வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கும் அவருடைய மூத்த மகன்…

ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா டெல்லி திகார் சிறையிலிருந்து இன்று விடுதலைச் செய்யப்பட்டார்.

ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல் வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கும் அவருடைய மூத்த மகன் அஜய்சிங் சவுதாலாவுக்கும் கடந்த 2013-ம் ஆண்டில் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் கடந்த மார்ச் மாதம் ஓம் பிரகாஷ் சவுதாலா அவசர பரோலில் விடுவிக்கப்பட்டார். இந்த பரோல் பின் இருமுறை நீட்டிக்கப்பட்டது. ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு மூன்று மாதங்களே சிறை தண்டனையே மீதமுள்ள உள்ள நிலையில், கரோனா பரவல் காரணமாகச் சிறைகளில் நெரிசலைக் குறைக்க, டெல்லி அரசு ஏழு முதல் பத்து ஆண்டு சிறை தண்டனை பெற்று ஐந்து மாதங்களே மீதமுள்ளவர்களை விடுவிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் திகார் சிறையிலிருந்து ஓம் பிரகாஷ் சவுதாலா விடுவிக்கப்பட்டார். அவருக்கு இந்தியன் லோக் தள கட்சியின் உற்சக வரவேற்பு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.