மலைக்கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் – அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்…

அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராமங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 108 வாகன சேவை, இலவச தாய் சேய் நல ஊர்தி, அமரர் ஊர்தி மற்றும் நடமாடும் மருத்துவ குழு உள்ளிட்ட மருத்துவ சேவைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தளவாடங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 100 சித்த மருத்துவமனைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இந்தியாவிலேயே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆளுநர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளோம். எனவே விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் முதல்வர் விரைவில் துவக்கி வைப்பார்.


உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஆணையால், ஒப்பந்த மற்றும் அவுட் சோர்சிங் மூலம் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்யமுடியவில்லை. தமிழ்நாடு முழுவதும் மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குரிய நோய் தன்மை குறித்து ஹெல்த் ரெஜிஸ்ட்ரி மென்பொருள் மூலம் தனி செயலி உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது” என்றார்‌.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.