விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில், கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைதான ஹரிகரன், மாடசாமி உள்ளிட்ட 4 பேரை, 6 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் கடந்த 29ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது.
இதனையடுத்து கடந்த 6 நாட்களாக நான்கு பேரிடமும் கூட்டாகவும் தனித்தனியாகவும் குறுக்கு விசாரணையும், பாலியல் வன்கொடுமை நடைபெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றும் சிபிசிஐடி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து 4 பேரின் சிபிசிஐடி போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பு மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நான்கு பேருக்கும், 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்த நீதிபதி, அவர்களை வரும் 18ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: