கேது பெயர்ச்சியை முன்னிட்டு சீர்காழி நாகநாத சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள நாகநாத சுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள கேது பகவானுக்கு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கேது…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள நாகநாத சுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள கேது பகவானுக்கு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கேது வருகிற 8ம் தேதி துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயருகிறார். இதனையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள நாகநாதசுவாமி கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் கேது பகவானுக்கு மஞ்சள்,சந்தனம்,விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேந்தன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.