விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வார்த்தையை நீக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹிந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. லலித் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளனர்.
லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில், நேற்று முன் தினம் டிரெய்லர் வெளியானது. இந்த டிரைலர் குறித்து ஹிந்து மக்கள் கழகம் சார்பில் சென்நை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹிந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.







