மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1980-81 கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை வைத்தீஸ்வரன் கோயிலில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் கடந்த 1980-81 கல்வி ஆண்டில் பயின்று தற்போது பல்வேறு அரசுத்துறைகளிலும்,தொழில் அதிபர்களாகவும் உள்ள மாணவர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்க முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனையடுத்து பள்ளியில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.
எத்தனை வயதானாலும் தங்களின் பால்யகால நண்பர்களை கண்டதும் மெய்மறந்து ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் பிச்சுமணி, முன்னாள் ஆசிரியர்கள் வெங்கட்ராமன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் கலந்து கொண்டார். முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த நிகழ்வு காண்போரை நெகிழச் செய்தது.
வேந்தன்







