மாவூர் அணைக்கு குளிக்க சென்ற சிப்காட் தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு!

பள்ளப்பட்டி மாவூர் அணையில் குளிக்க சென்ற சிப்காட் தனியார் தொழிற்சாலை ஊழியர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.  திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள மாவூர் அணையில் மது அருந்திவிட்டு குளிக்க…

பள்ளப்பட்டி மாவூர் அணையில் குளிக்க சென்ற சிப்காட் தனியார் தொழிற்சாலை ஊழியர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். 

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள மாவூர் அணையில் மது அருந்திவிட்டு குளிக்க சென்ற போது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியே சென்ற பொதுமக்கள் சடலம் ஒன்று தென்படுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த அம்மையநாயக்கனூர் போலீசார் நீரிலிருந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் விசாரணையில் இறந்த நபர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார்
தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றியதாகவும் மது அருந்திவிட்டு அணை
பகுதிக்கு குளிக்க சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.

பொதுப்பணித்துறை சார்பில் மாவூர் அணையில் குளிப்பது ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் , பொதுமக்கள் சற்றும் அச்சமின்றி தொடர்ந்து அப்பகுதியில் குளித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில்  நீரில் மூழ்கி ஐந்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எனவே இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.