இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவ மக்களின் இறைநம்பிக்கை ஆகும். இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் திருநாளை கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் ஈஸ்டர் திருநாளையொட்டி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தலத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “இயேசு பிரான் உயிர்த்தெழுந்த நன்னாளாம் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புனித நாளில், அனைவருக்கும் இயேசுபிரான் அருளும், அன்பும் கிடைக்கட்டும். அமைதியும், மகிழ்ச்சியும் அனைவரின் இல்லங்களிலும் நிலைக்கட்டும்.
அனைவருக்கும் இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







