மே தினத்தை முன்னிட்டு கிடைக்கப்பெற்ற தொடர் விடுமுறையைக் கொண்டாட ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு இன்று காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கினர். மே தினம் மற்றும் பள்ளிகளில் தொடர் விடுமுறையை முன்னிட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வருகை ஓகேனக்கலில் அதிகரித்தது. தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்ததால் சுமார் 8 கிலோமீட்டர் அளவிற்கு சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல் முக்கிய அருவியான சீனி அருவிக்குச் செல்லும் பகுதியில் ஆற்றில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து கொண்டாடினர். தொங்கு பாலம் பகுதியில் இருந்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தும், எண்ணெய் மசாஜ் செய்து ஆற்றில் நீராடியும் விடுமுறையைக் கொண்டடினர்.
—-சௌம்யா.மோ






