மே 23-ம் தேதி வெளிநாடு பயணம் – பெண்களை அதிகம் வரவேற்கும் நிறுவனங்களை ஈர்க்க முதலமைச்சர் திட்டம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 23ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜப்பான் நாட்டை சேர்ந்த…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 23ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனத்துடனான, தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதன்படி, மிட்சுபிசி நிறுவனம் தமிழ்நாட்டில் ஆயிரத்து 891 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்ய உள்ளது. திருவள்ளூர், பெருவாயலில் மிட்சுபிசி நிறுவனத்தின் காற்றுச்சீரமைப்பு மற்றும் காற்று அழுத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஷ்ணு, மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..! -

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக முக்கியமான முதலீடு இது. 100% வெளிநாட்டு முதலீடாக இந்த முதலீடு அமைந்துள்ளது. உலகளவில் முக்கியத்துவம் பெற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டில் நான் அதிகம் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், தொழில்துறை நிகழ்ச்சிகள்தான் அதிகம். அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்திக்கும்போதெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை, வேலைவாய்ப்பு குறித்தெல்லாம் கேட்டுக்கொண்டேயிருப்பேன். இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லவிருக்கிறேன். முதலீட்டு குழுவிற்கு தலைமை தாங்கி ஜப்பான் செல்லவுள்ளேன். தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளேன் என தெரிவித்தார்.

மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..! -

மேலும் தொடர்ந்து பேசிய அவர், பெண்களை அதிக அளவில் பயன்படுத்தும் நிறுவனங்களை வரவேற்க இருக்கிறோம். ஜப்பான் நிறுவனங்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதிக அளவு ஜப்பானியர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த உறவை மேலும் வலுப்படுத்த ஜப்பான் நாட்டு முன்னணி தொழில் நிறுவனங்களை சந்தித்து முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கவுள்ளேன். அதற்கு, மைல்கல்லாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என கூறினார்.

முதலமைச்சர் மே 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லவுள்ளதை ஏப்ரல் 23 ஆம் தேதியே நியூஸ் 7 தமிழ் முதலாவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.