பிரிவினையை தூண்டும் வகையில் ‘சோனியாகாந்தி’ பேசியதாக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…

பிரிவினையை தூண்டும் வகையில் சோனியாகாந்தி பேசியதாக, விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை, தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய சோனியாகாந்தி, கர்நாடகா…

பிரிவினையை தூண்டும் வகையில் சோனியாகாந்தி பேசியதாக, விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை, தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய சோனியாகாந்தி, கர்நாடகா மாநில நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த, யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது என்று தெரிவித்திருந்தார்.

சோனியாந்தியின் பேச்சு குறித்து டுவிட்டர் பதிவை காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் சோனியா காந்தியின் இந்த கருத்து, பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.

இதையடுத்து ட்விட் பதிவு குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.