’அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு’ – அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக்கோரிக்கையின் விவாதம் மீது நேற்று பதிலுரை ஆற்றிய அவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, பட்டறைப்பெரும்புதூர்…

அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக்கோரிக்கையின் விவாதம் மீது நேற்று பதிலுரை ஆற்றிய அவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, பட்டறைப்பெரும்புதூர் வளாகத்தில் விளையாட்டுத்திடல் நிறுவப்படுமெனவும், அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் எனவும், புதிதாக நூலகங்கள் கட்டித்தரப்படும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், உதகை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிரிக்கப்பட்டு, தனியாக ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும், போடி, வந்தவாசி, முசிறி, சீர்காழி, ஸ்ரீவைகுண்டம், கொடுமுடி, சங்கராபுரம் ஆகிய இடங்களில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.

அண்மைச் செய்தி: ஜூன் 3-ஆம் தேதி சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோள் விருது வழங்கப்படும் – அமைச்சர் சாமிநாதன் 

மேலும், அணைக்கட்டு, மொடக்குறிச்சி, விராலிமலை, கீழ்பெண்ணாத்தூர், வத்திராயிருப்பு, கல்வராயன்மலை, குன்றத்தூர், கே.வி.குப்பம், வண்டலூர் ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப் பிரிவால் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படும் வழக்குகளை, பிரத்யேகமாக விசாரணை செய்ய கூடுதல் நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நலநிதிக்கு அரசால் வழங்கப்படும் மானியம் 8 கோடியில் இருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என குறிப்பிட்ட அவர், திருச்சி, மதுரை மற்றும் கோவை பெண்கள் தனிச்சிறைகளில், தலா ஒரு நல அலுவலர் பணியிடம் புதிதாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.