டெல்லி அமைச்சருக்கு சிறையில் மசாஜ்; வைரலாகும் வீடியோ

டெல்லி ஆம்ஆத்மி அமைச்சருக்கு ஜெயிலில் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மீது பணமோசடி வழக்கு பதிவானது. இதனால்,…

டெல்லி ஆம்ஆத்மி அமைச்சருக்கு ஜெயிலில் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மீது பணமோசடி வழக்கு பதிவானது. இதனால், கடந்த மே மாதம் 30-ம் தேதி அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது. இதனால், அவர் வகித்து வந்த இலாகாக்கள், சுகாதாரம், உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்டவை துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், டெல்லி அமைச்சரவையில் எந்த பொறுப்பும் இன்றி ஜெயின் அமைச்சராக நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது என அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்தது. சத்யேந்திர ஜெயின் அறைக்கு செல்ல அவரது மனைவி பூனம் ஜெயினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் அவர் குறிப்பிட்ட நேரத்திற்கும் கூடுதலாக அதிக நேரம் அங்கேயே இருக்கிறார். சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுகிறது.

https://twitter.com/ANI/status/1593825541060108288

சத்யேந்திர ஜெயின் ஒரு அமைச்சர். அதனை அவர் நியாயமற்ற முறையில் பயன்படுத்தி கொள்கிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அமைச்சரின் சிறை சம்பந்தபட்ட அனைத்து சி.சி.டி.வி. காட்சிகளையும் அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.

இந்த நிலையில், சிறையில் ஜெயின் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. டெல்லி அரசின் கீழ் வரும் டெல்லி சிறையில், ஜெயின் படுக்கையில் படுத்தபடி, காகிதங்களில் உள்ள தகவலை வாசித்தபடி காணப்படுகிறார். அவரருகே உள்ள நபர், ஜெயின் காலுக்கு மசாஜ் செய்கிறார். தற்போது இந்த வீடியே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி சிறையில் வி.ஐ.பி. சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று குற்றச்சாட்டு கூறி, அவரை திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று, பா.ஜ.க. 2 நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வீடியோ வெளிவந்து உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.