தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சுமார் 100 அதிகரித்துள்ளது.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 596ஆக இருந்த நிலையில் இன்று புதிதாக 692 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, இன்று 19,496 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 3.54 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 306 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 122 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 48 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 43 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 32 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 22 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்தாலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 3,522ஆக உயர்ந்துள்ளது.







