மதுரை அழகர்கோயில் தெப்பத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா

மதுரை அழகர்கோயிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பிய தெப்பத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது. மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா “மாசி மகம்” தான். சைவ, வைணவ, அம்பாள்,…

மதுரை அழகர்கோயிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பிய தெப்பத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது.

மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா “மாசி மகம்” தான். சைவ, வைணவ, அம்பாள், முருகன் என எல்லா தெய்வங்களுக்கும் மாசிமகம் திருவிழா தான்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோயிலுக்கு சொந்தமான தெப்பத்தில், கடந்த பத்து ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால், கள்ளழகர் கரையைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த ஆண்டு, கால்வாய்கள் தூர்வாரப்பட்டு அழகர் மலையில் பெய்யும் மழைநீர் நேரடியாக தெப்பத்திற்கு வரும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.

அண்மைச் செய்தி: மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதனையடுத்து இன்று நடைபெற்ற மாசி மாத தெப்பத் திருவிழாவையொட்டி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் கள்ளழகர் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பட்டு தெப்பத்திற்கு வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து, நீர் நிரம்பிய தெப்பத்தில் அன்னம் போல் வடிவமைக்கப்பட்ட 24 அடி நீள பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.