புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை – ஆட்சியர் அதிரடி

புதுச்சேரி மாநிலத்தில், பொதுமக்களிடம் இருந்து புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியார்களை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் சந்தித்து பேசினார். புதுச்சேரியில் நில…

புதுச்சேரி மாநிலத்தில், பொதுமக்களிடம் இருந்து புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியார்களை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் சந்தித்து பேசினார்.
புதுச்சேரியில் நில அபகரிப்பு தொடர்பான பல புகார்கள் வருவதாகவும், புகார்கள் குறித்து குழு அமைத்து ஆராய படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் இருந்து புகார்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


பின்னர், அவர் மத்திய அரசு நாடு முழுவதும் வெப்ப அலை தாக்கம் இருக்க கூடும் என்று தெரிவித்ததை கூறினார். மேலும் வெப்ப அலை தாக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய அவர் குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், அதிகளவு தண்ணீர் பருக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேவையின்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதையடுத்து தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக புகார் வந்ததை அடுத்து ,உள்ளாட்சி துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்தார்.

-கோ. சிவசங்கரன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.