டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பதக்கத்தோடு இந்தியா திரும்புவேன் என்று நினைத் தேன், ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்படியாகிவிட்டது என்று இந்திய வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தார். பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் கொலம்பியாவின் இன்கிரிட் வலன்சியாவுடன் (Ingrit Valencia) மேரி கோம் மோதினார்.
முதல் சுற்றில் 1-4 என்ற கணக்கில் தோற்ற மேரி கோம், இரண்டாவது சுற்றில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 3-வது சுற்றில் வலென்சியா வெற்றியாளராகவும், மேரி கோம் நாக் அவுட்டாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இதனால் ஏமாற்றமடைந்த மேரி கோம், ‘இந்த போட்டியும் முடிவும் துரதிர்ஷ்ட வசமானது. நான் பதக்கத்துடன் இந்தியாவுக்குத் திரும்புவேன் என்று நினைத்தேன். ஆனால் தவறாக என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் இந்தப் போட்டியில் தோல்வியடைந் தேன் என்பதை இன்னும் நம்பவே முடியவில்லை. நான் 40 வயதுவரை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பேன்’ என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.








