முக்கியச் செய்திகள் விளையாட்டு

கடைசி டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

இலங்கைக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தொடரை வென்ற இந்திய அணி, இப்போது, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று வருகிறது.

முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 2 வது போட்டியில் விளையாட இருந்த நிலையில், குணால் பாண்ட்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவருடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா, சாஹல், கிருஷ்ணப்பா கவுதம், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர் ஆகிய வீரர்கள் தனிமைப்
படுத்தப்பட்டனர்.

இதனால் இரண்டாவது டி-20 போட்டி ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது. நேற்று நடந்த அந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, சேத்தன் சகாரியா ஆகிய அறிமுக வீரர்கள் உட்பட இளம் வீரர்கள் களமிறங்கினர். இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம அளவில் உள்ளன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சந்தீப் வாரியர் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.

இந்திய அணி விவரம்:
ஷிகர் தவான் (கேப்டன்). ருதுராஜ் ஜெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் ராணா, புவனேஸ்வர்குமார், சந்தீப் வரியர், சேதன் சக்காரியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சாகர்.

Advertisement:
SHARE

Related posts

விக்ரமின் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் இர்பான் பதான்!

Niruban Chakkaaravarthi

DNT சான்றிதழை ஒற்றை சான்றாக வழங்க வலியுறுத்தி மறியல்!

Niruban Chakkaaravarthi

திமுகவின் 100 நாட்கள் சாதனை குறித்து அண்ணாமலை விமர்சனம்

Saravana Kumar