முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருமணம் என்பது உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல:உயர்நீதிமன்றம்

திருமணத்தின் அடிப்படை நோக்கமே சந்ததியை உருவாக்குவது தானே தவிர, உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கணவனை விட்டு பிரிந்த மனைவி, இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, குழந்தைகளை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி வழக்கு தொடரும் பிரிந்த தம்பதியரால் குழந்தைகள் தீய உலகத்திற்குள் கொண்டு செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருமணம் என்பது சந்ததியினரை உருவாக்கத் தானே தவிர, உடல் இன்பத்திற்காக மட்டும் அல்ல என்றும், குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பது அவர்களை துன்புறுத்தும் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.


ஒரு குழந்தையை அதன் பெற்றோருக்கு எதிராக திருப்புவது என்பது தனக்கு எதிராக திருப்புவதை போன்றதாகும் என்றும், இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் மட்டுமின்றி, குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதாகும் எனக் கூறி, இரு குழந்தைகளையும் தாயின் தற்காலிக கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.

 

-பரசுராமன்.ப 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா வைரஸ் : தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு!

EZHILARASAN D

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!

Halley Karthik

இந்தியாவில் புதிதாக 12,830 பேருக்கு கொரோனா

Halley Karthik