பள்ளி மாணவிகளுக்கு திருமணம்; கே.பாலகிருஷ்ணன் வேதனை

பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தைப் பிரச்சாரம் செய்யச் சிறப்புத் திட்டம் வகுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில், கொரோனா காலத்தில் 513 மாணவியருக்குக் குழந்தை மணம் நடந்துள்ள அதிர்ச்சிகரமான விபரம் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.…

பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தைப் பிரச்சாரம் செய்யச் சிறப்புத் திட்டம் வகுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில், கொரோனா காலத்தில் 513 மாணவியருக்குக் குழந்தை மணம் நடந்துள்ள அதிர்ச்சிகரமான விபரம் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் 10 பேர், 8 ஆம் வகுப்பு மாணவியர்.
பாலின பாரபட்சத்திற்கு எதிரான தீவிர செயல்பாடுகளில் அவசியத்தை இந்த நிலைமை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு, இந்த குறிப்பான பிரச்சினையில் நடவடிக்கை மேற்கொள்வதுடன், பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தைப் பிரச்சாரம் செய்யச் சிறப்புத் திட்டம் வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
 
 
மேலும்,  கொரோனா பேரிடர் காலத்தில், தமிழ் நாட்டில் நடந்த, 10,11,12-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வுகளில் சுமார் 6.70 லட்சம்  மாணவர்கள் பங்கேற்கவில்லை. குறிப்பாக பத்தாம் வகுப்புத் தேர்வில் மட்டும் 2.25 லட்சம் பேர் பங்கெடுக்கவில்லை. அந்த மாணவர்களுக்காக, மறுதேர்வு நடத்த அரசு எடுத்த முடிவு அவசியமான ஒன்று எனவும்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே நேரத்தில் மாணவர்களை இந்த தேர்வுகளில் வெற்றியடையச் செய்திடவும் அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள், பழங்குடியின / பட்டியலின மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துவதுடன், தேர்வுக்கான பயிற்சி, மாணவர்கள் பயண ஏற்பாடுகள், அருகாமை தேர்வு மையங்கள் என விரிவாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் எனத் தமிழ் நாடு அரசை வலியுறுத்துவதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.