முக்கியச் செய்திகள் சினிமா

திருப்பதி செல்லும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி

திருமணம் முடிந்த கையோடு திருப்பதி செல்ல நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடைபெற்றது. அங்கு திருமணத்துக்காக பிரத்யேகமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறும் பகுதியில் அனைத்து இடத்திலும் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: “100% நகைக்கடன் தள்ளுபடி” – கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மடிப்பாக்கம் மீனாட்சி சுந்தரேஷ்வர் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில், நங்கநல்லூர் கருமாரி அம்மன் கோயிலை சேர்ந்த 15 புரோகிதர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் இன்று காலை 10.25 மணியளவில் நடந்தது. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், நடிகர் ஜெயம்ரவி, இயக்குநர் மோகன் ராஜா, கலா மாஸ்டர், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், இயக்குநர் சிவா, கேமராமேன் வெற்றி, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, நடிகர் வசந்த், நடிகர் சரத்குமார், நடிகர் விஜய்சேதுபதி தனது மகளுடன் கலந்து கொண்டார். மேலும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, இயக்குநர் கௌதம் மேனன் ஆகிய முக்கிய திரையுலக பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் திருமணம் நடந்த தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணத்தை திருப்பதியில் நடத்த விரும்பி, சில காரணங்களுக்காக திருமண இடம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒ.பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

G SaravanaKumar

கூட்டுறவுத்துறை மக்களின் உயிர்நாடி – ராதாகிருஷ்ணன்

Web Editor

ஓ.பி.எஸ். அழைப்புக்கு கே.பி.முனுசாமி பதிலடி

Dinesh A