செய்திகள்

மார்க் சக்கர்பெர்க்கை வீழ்த்திய பில் கேட்ஸ்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 மணி நேரம் ஃபேஸ்புக் முடங்கியதால் மார்க் சக்கர்பர்க்கிற்கு சுமார் ரூ. 45,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல சமூகவலைதள சேவைகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மூன்றுமே தொழில்நுட்ப கோளாறால் நேற்று இரவு 7 மணி நேரம் முடங்கியது. பொதுமக்களுக்கு என்ன நடக்கிறது என்றே முதலில் புரியவில்லை. இதன் விளைவாக பேஸ்புக் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 121.6 பில்லியன் டாலராக குறைந்தது. அதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் சக்கர்பெர்க் பில் கேட்ஸுக்கு பின்னால் தள்ளப்பட்டார்.

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணிநேரம் முடங்கியதற்குத் தவறான கான்பிகிரேஷன் மாற்றம் தான் அடிப்படை காரணம் எனப் பேஸ்புக் விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் எந்தப் பிரிவு இதற்குக் காரணம், யார் காரணம் போன்ற விஷயங்களைப் பேஸ்புக் வெளியிடவில்லை.

Advertisement:
SHARE

Related posts

கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக அரசு காத்துவருகிறது: முதல்வர்!

Gayathri Venkatesan

காங்கிரஸ் கட்சியின், மாநில மனித உரிமை செயலாளர் செல்வராணி பாஜகவில் இணைந்தார்!

Halley karthi

பசியாற்றும் பிட்சா ஹீரோ!

Vandhana