பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தடுக்க உத்தரவிட கோரி மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் பேனர்கள் வைக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவனை பணிக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பேனர்கள் வைப்பதை முழுமையாக தடை செய்யும் வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.