முக்கியச் செய்திகள் தமிழகம்

புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

மசினகுடி வனபகுதியில் சுற்றி வரும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க T23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று, கடந்த சில வாரங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்தது. தற்போது வரை 4 பேரை புலி கொண்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புலியின் தொடர் வேட்டையை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து புலி வேட்டையாடப்பட்டு பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து கும்கி யானைகள், சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் மற்றும் 150 வனதுறையினர் களத்தில் இறங்கப்பட்டனர்.

தொடக்கத்தில் சுட்டு கொல்லப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், #savet23 எனும் ஹாஷ் டேக் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனையடுத்து புலி சுட்டுக்கொல்லப்படாது என வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர், புலியை சுட்டுக் கொல்லக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று தொடங்கியது.

இதில், புலியை சுட்டுக்கொல்லக்கூடாது என்றும் அந்த புலி ஆட்கொல்லியாக இல்லமல்கூட இருக்கலாம் என்றும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார். அதே போல புலியை பிடிக்கும் பணியில் மற்ற உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்து வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

முன்னதாக கடந்த 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தற்போது 11வது நாளாக இன்றும் தொடர்கிறது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று!

Hamsa

விவசாயம்தான் எனது பிரதான தொழில்: முதல்வர்!

Gayathri Venkatesan

ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கலாகிறது தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை

Halley karthi