முக்கியச் செய்திகள் குற்றம்

புழல் சிறையில் மாரிதாஸ்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், யூ டியூபர் மாரிதாசை வரும் 27-ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் அடைக்க, சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து வழக்கில், யூடியூபர் மாரிதாஸ், மாநில அரசு குறித்து அவதூறாக குற்றச்சாட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மாரிதாஸ் மீது தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் கடந்தாண்டு புகார் அளித்திருந்தது.

இதில், தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் தொடர்பாக, அந்நிறுவன தலைமையிடம் புகார் அளித்ததாகவும், அதற்கு நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகவும் தெரிவித்து, மாரிதாஸ் வெளியிட்டிருந்த மின்னஞ்சல் போலியானது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், மாரிதாஸ் மீது போலி ஆவணம் உருவாக்குதல், மோசடி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாரிதாசை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான விசாரணைக்காக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், மாரிதாஸ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு, வரும் 27-ஆம் தேதி வரை, மாரிதாசை, நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, கோதண்டராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

100 கோடி தடுப்பூசி; இலக்கைக் கடந்தது இந்தியா

Halley Karthik

8-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

Halley Karthik

கேரளப் பெண் புகார்: சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை

Halley Karthik