திருவிடைமருதூர் மகாமாரியம்மன் கோயில் 30ஆம் ஆண்டு பால்குட விழா!!

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே பிரசித்தி பெற்ற சீதளா தேவி மகா மாரியம்மன் கோயில், 30ஆம் ஆண்டு பால்குட அழகு காவடி பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூரில் பிரசித்தி…

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே பிரசித்தி பெற்ற சீதளா
தேவி மகா மாரியம்மன் கோயில், 30ஆம் ஆண்டு பால்குட அழகு காவடி
பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூரில் பிரசித்தி பெற்ற
சீதளாதேவி மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு முப்பதாம் ஆண்டு
பால்குட அழகு காவடி திருவிழா பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
கஞ்சனூர் வட காவிரி ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பால்குடங்களை
எடுத்து வந்தனர்.

மேலும், உடலில் அழகு குத்தியும், மங்கல வாத்தியங்கள் இசைத்தும்
வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனர். பக்தி
பரவசமாக பெண்கள் நடனம் ஆடினர். தொடர்ந்து, கோயிலில் உள்ள மூலவரான சீதளாதேவி மகாமாரியம்மனுக்கு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.