ஈரோடு, பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன், மகா கணபதி பழமை வாய்ந்த கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இந்நிலையில் கோயில் புனரமைக்கபட்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு செவ்வாய் கிழமை தீர்த்தம் எடுத்து வருதல்,
மகா கணபதி ஹோமம், இரண்டாம் கால பூஜை, கோபுர கலசம் நிறுவுதல், மூன்றாம் கால பூஜை நடை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை தொடர்ந்து மங்கல இசையும் நான்காம் கால பூஜையும் நடைபெற்றன.
தொடர்ந்து கோபுரத்தின் மேல் உள்ள விமான கலசங்களுக்கு கும்பாபிஷேக விழா
நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங் மகா கணபதி மகா மாரியம்மன் கும்பாபிஷேகம்
நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா கணபதிக்கும் மகா மாரியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றது. மாரியம்மனை கும்பிட்டால் வேளாண்மை செழிப்பாகும் என்றும் மும்மாரி மழை பெயும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.
ஸ்ரீ.மரகதம்