ஆண்டுக்கொரு முறை அதிசயமாய் பூக்கும் பிரம்ம கமலம் பூ!

போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தில், ஆண்டுக்கொரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ப கமலம் பூ பூத்துள்ளதை குடும்பத்தினர் படையலிட்டு வழிபட்டனர். போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தருமன். விவசாயியான இவர், தனது நண்பர்…

போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தில், ஆண்டுக்கொரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ப கமலம் பூ பூத்துள்ளதை குடும்பத்தினர் படையலிட்டு வழிபட்டனர்.

போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தருமன்.
விவசாயியான இவர், தனது நண்பர் பரிசளித்தாக பிரம்ம கமலம் செடியை தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். மூன்று வருடங்கள் கழித்து நேற்றிரவு செடியிலிருந்து பூக்கள் பூத்தது. மொட்டாக இருந்த பூ இரவு 10 மணிக்கு மேல் நல்ல மலர்ந்த நிலைக்கு வந்தது.

மேலும், அதிக நறுமணத்தை வெளிப்படுத்தியது. பூக்கள் பூப்பதை எதிர்பார்த்து
காத்திருந்த குடும்பத்தினர் பிரம்ம கமலம் பூவிற்கு படையலிட்டு வழிபட்டனர்.
அதிசயமாய் பூத்த பிரம்ம கமலம் பூவை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து
சென்றனர்.

இதுகுறித்து தருமன் கூறியதாவது, பிரம்ம கமலம் பூ என்பது இமயமலைகளில் வளரும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால், இமய மலைகளில் மட்டுமல்லாமல் நன்கு பராமரித்தால், அனைத்து பகுதிகளிலும் பிரம்ம கமலம் பூ பூக்கும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறினார்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.