முக்கியச் செய்திகள் குற்றம்

மனைவியின் உடலில் 16 இடங்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய கணவன்!

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த மனைவியின் உடலில் 16 இடங்களில் சூடு வைத்து கணவர் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம்.தண்டா கிராமத்தில் பழனிசாமி என்பவரின் மகன் பாண்டியன் என்பவருக்கும் பத்ரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் சஞ்சனா என்ற மகளும், 3 வயதில் பவன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முதல் மனைவி இறந்ததை மறைத்து இரண்டாம் திருமணம் செய்துள்ளது மனைவி கலைவாணிக்கு தெரியவந்தது. இதுகுறித்து கணவன் பாண்டியனிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு வந்துள்ளது. அதன்பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வருவது வாடிக்கையாகிவிட்டது.

பாண்டியன் மற்றும் கவிதா

இந்நிலையில் பாண்டியன் கடந்த 5 ஆண்டுகளாக பென்னாகரத்தை அடுத்த நெருப்பூரை சேர்ந்த கவிதா என்ற ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் கலைவாணிக்கு தெரியவந்தது. இதை தட்டிக்கேட்ட கலைவாணியை, பாண்டியன் மற்ற ஆண்களுடன் தொடர்புப்படுத்தி பேசி, அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு அனுப்பியுள்ளார். இதனால் தாய் வீட்டிற்கு சென்ற கலைவாணியை உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் சமதானம் செய்து கணவருடன் மீண்டும் அனுப்பியுள்ளனர்.

ஆனாலும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர்கள் கலைவாணிக்கு வலுகட்டாயமாக குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் லேசான மயக்கத்தில் இருக்கும்போது அவருடைய கை, கால், மார்பகம் மற்றும் பிறப்பு உறுப்பு உட்பட உடல் முழுவதும் 16 இடங்களில் சூடு வைத்து துன்புறுத்தியுள்ளனர்.

கலைவாணியின் அலறல் சத்தம் கேட்ககூடாது என்பதற்காக அவரது கை, கால்களை கட்டி, வாயில் துணி வைத்தும் அடைத்துள்ளனர். பின்னர் சில மணி நேரம் கழித்து அவர்களே கயிற்றை அகற்றியுள்ளனர். பின்பு இதுகுறித்து வேறு யாரிடமாவது கூறினால் கலைவாணியையும், குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்து தப்பித்த கலைவாணி, அவரது தாய் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோரிடம் நடந்த கொடுமைகள் அனைத்தையும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் அவரை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர்.

பாண்டியனின் பெற்றோர்

பின்னர் இச்சம்பவம் குறித்து பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல் துறையினரோ, கணவர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து விட்டு மற்றவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கணவர் பாண்டியன், அவரது பெற்றோர்கள் மற்றும் அவர் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கவிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கை கண்காணிக்க 30 குழுக்கள்:ககன்தீப் சிங்!

பிரபல மல்யுத்த வீரரின் உறவினர் தற்கொலை?

Halley karthi

கிருஷ்ணகிரி அருகே 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் கண்டெடுப்பு

Jeba Arul Robinson