முதல் சம்பளத்தில் ஏசி: இளைஞர் பதிவிட்ட வீடியோ வைரல்!

முதல் சம்பளத்தில் குடும்பத்திற்கு ஏசி வாங்கி கொடுத்ததாக சப்ஸ்கிரைபர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ள வீடியோ  வைரலாகி வருகிறது. இளைஞர்கள் பலருக்கு நல்ல பணியில் சேர்ந்து கிடைக்கும் சம்பளத்தில் தங்களின் அன்புக்குரியவர்கள் விரும்பிய பொருள்களை வாங்கிக்…

முதல் சம்பளத்தில் குடும்பத்திற்கு ஏசி வாங்கி கொடுத்ததாக சப்ஸ்கிரைபர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ள வீடியோ  வைரலாகி வருகிறது.

இளைஞர்கள் பலருக்கு நல்ல பணியில் சேர்ந்து கிடைக்கும் சம்பளத்தில் தங்களின் அன்புக்குரியவர்கள் விரும்பிய பொருள்களை வாங்கிக் கொடுப்பது கனவாக இருக்கும். அப்படி தான் பெற்ற முதல் மாத சம்பளத்தில் இளைஞர் தேவேஷ் குமார் தனது குடும்பத்தினர் குளுமையாக இருக்க குளிர்சாதன பெட்டி வாங்கிக் கொடுத்துள்ளார். இப்படி குடும்பத்தினரை குளர்வித்த அந்த இளைஞர், இணையவாசிகளையும் குளிர செய்துள்ளார். தான் வாங்கிக்கொடுத்த அந்த குளிர்சாதனப்பெட்டியை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.

ஜூலை 24-ம் தேதி பகிரப்பட்ட அந்த ட்வீட் 8.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 20,600 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. இந்த பகிர்வு ஏராளமான மறு ட்வீட்களைப் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கானோர் புக்மார்க் செய்துள்ளனர்.

“குடும்பத்திற்கு முதல் ஏசி வாங்குவது நடுத்தர வர்க்க மகனுக்கு பெருமை சேர்க்கும் தருணங்களில் ஒன்றாகும். அந்த உணர்வை நான் அறிவேன். நற்பணியை தக்க வைத்துக்கொள்ளவும். “எனக்கு உன்னைத் தெரியாது, ஆனால் நான் உன்னைப் பற்றி பெருமைப்படுகிறேன் நண்பரே என வாசகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.