நள்ளிரவில் டான்ஸ்: ’தூக்கத்தை கெடுத்த’ இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

நள்ளிரவில் கல்யாண வீட்டில் நடனமாடிய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமித் காஷ்யப் (18). இவருடைய மாமாவுக்கு திருமணம் என்பதால் அதற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின்…

நள்ளிரவில் கல்யாண வீட்டில் நடனமாடிய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமித் காஷ்யப் (18). இவருடைய மாமாவுக்கு திருமணம் என்பதால் அதற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இரவில் உறவினர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். இந்திப் பாடல்களுக்கு  ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.

இந்தப் பாட்டு சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு எரிச்சலைத் தந்தது.  பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுரேந்திர சிங் என்பவர், இதனால் கோபம் அடைந்தார். இவர்களின் பாட்டு சத்தத்தால் அவர் தூக்கம் கலைந்தது.

கோபமடைந்த அவர், வேகமாக வெளியே வந்தார். ’ஏன் இவ்வளவு சத்தம்?’ என்று கேட்டுக் கொண்டே வந்தவர் தனது துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். பிறகும் பாட்டு சத்தம் நிற்காததால், கோபமடைந்த அவர், சுமித் காஷ்யபை குறிபார்த்து சுட்டார். இதில் அவர் நெற்றியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை எதிர்பார்க்காத அவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் காஷ்யப் உடலைக் கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மற்றொரு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.

இந்த சம்பவத்தால் திருமண வீடு துக்க வீடாக மாறியது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.