தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாக தேவி ஐபிஎஸ் சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், பகேரியா செபாஸ் கல்யாண், சரவணன், கருண் உத்தவ் ராவ், மயில்வாகனன், மதன், சண்முகம், மாதவன், சிலம்பரசன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செயயப்பட்டுள்ளனர்.







