“2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்கும்” – அண்ணாமலை

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக 150 எம்.எல்.ஏக்களை பெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியலில் இணைவதற்காக ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலையை பாஜக மாநில…

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக 150 எம்.எல்.ஏக்களை பெற்று ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அரசியலில் இணைவதற்காக ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலையை பாஜக மாநில தலைவராக நியமித்து பாஜகவின் தேசிய தலைமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இந்நிலையில் கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை யாத்திரைப்போல வந்த இன்று பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலிலி அமருவதே இலக்கு என பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, 2026ம் ஆண்டு 150 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைப்போம் என கூறினார். இன்னும் 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதற்கான விதைகளை தூவுவோம் எனவும் குறிப்பிட்டார்.

Annamalai during Vel Yatra

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 2001ம் ஆண்டு கிருபாநிதி தமிழ்மாநில பாஜக தலைவராக இருந்தபோது திமுக கூட்டணியில் 21 இடங்களில் போட்டியிட்டு பாஜக 4 இடங்கங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அப்போது திமுக ஆட்சி அந்தஸ்தை இழந்தது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக மீண்டும் அதே 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் 2026ம் ஆண்டு பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியை அமைக்கும் அதன் மாநில தலைவர் அண்ணாமலை தொண்டர்களுக்கு உற்சாகமளித்துவருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.