முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மருமகனை காதலித்து திருமணம் செய்த மாமியார் கைது!

மருமகனை காதலித்து திருமணம் செய்துகொண்ட மாமியார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 25 வயது மருமகனை காதலித்து வந்துள்ளார். 2 பேரக் குழந்தைகளுக்கு பாட்டியான அந்தப் பெண், தன்னை விட பாதி வயதுள்ள மருமகன் மீது காதலில் விழுந்தது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

எதிர்ப்பு அதிகமானதால், காதல் ஜோடிகள் கடந்த 10 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினர். வேறு எங்கோ ஒரு பகுதியில் வாடகை வீடு எடுத்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பினர். பழைய பஞ்சாயத்தை மறந்து குடும்பத்தினர் தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் வந்தவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

அவர்கள், தங்கள் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் அதனால் ஒன்றாகத்தான் வாழ்வோம் என்றும் கூறினர். இதை ஏற்காததால் குடும்பத்தினர், அவர்களுடன் சண்டையில் இறங்கினர். பின்னர் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி, அவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரச்னை பரபரப்பானதால் போலீசாருக்கு விஷயம் சென்றது. விரைந்து வந்த அவர்கள் விஷயத்தைக் கேட்டனர். இந்த திருமணத்தை ஏற்க முடியாது என்றும் பொது ஒழுக்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்ற பிரிவில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், மாமியாரையும் மருமகனையும் கைது செய்தனர்.

Advertisement:

Related posts

தஞ்சை பெரியகோயில்: நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ அபிஷேகம்

Gayathri Venkatesan

கர்ப்பிணி மகளை சுட்டுக்கொன்ற தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு!

Gayathri Venkatesan

லாலு சிகிச்சை: ஜார்கண்ட் முதல்வரை சந்திக்கும் தேஜஸ்வி

Saravana