கார் ஓட்டிச் செல்லும் போது ஸ்டீயரிங்கை பிடிக்காமல் ரீல்ஸ் செய்த இளைஞர்

கார் ஓட்டிச் செல்லும் போது ஸ்டீயரிங்கை பிடிக்காமல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த இளைஞர் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பலரும் பல்வேறு விதமான வீடியோக்களை செய்து வருகின்றனர். இதன் மூலம் பிரபலமாகி வருகிறார்கள்.…

கார் ஓட்டிச் செல்லும் போது ஸ்டீயரிங்கை பிடிக்காமல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த இளைஞர் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பலரும் பல்வேறு விதமான வீடியோக்களை செய்து வருகின்றனர். இதன் மூலம் பிரபலமாகி வருகிறார்கள். பிரபலமாவதற்காக பல நபர்கள் வித்தியாசமான முறையிலும் வீடியோ செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர் செய்துள்ள வீடியோ தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அண்மைச் செய்தி :+2 பொதுத் தேர்வு: கள்ளக்குறிச்சியில் 10% மாணவர்கள் ‘ஆப்சென்ட்’

அந்த இளைஞர் ஸ்டீயரிங்கை விடுத்து காலை சீட்டின் அருகில் வைத்துக்கொண்டு ரீல் செய்துள்ளார். அவரது மனைவி அந்த சீட்டில் அமர்ந்திருக்கிறார். டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞர் தனது மனைவி பக்கம் திரும்பி  பேசுவது போல அந்த வீடியோ அமைந்திருக்கிறது. அப்போது ஸ்டீயரிங்க்லிருந்து முழுவதும் கையை எடுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் இந்த வீடியோவில் உள்ள நபரை கண்டித்து வருகின்றனர்.

அவர் ஓட்டிச் செல்லும் கார் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி 700. இதில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் உள்ளது. இதன்மூலம் கையை வைக்காமல் சிறிது தூரம் ஓட்டி செல்லமுடியும். ஆனால் இந்த வசதியை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதாக அந்த இளைஞரை கண்டித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.