“தி எலிஃபண்ட் விஸ்பரர்” ஆவணப்படத்தை இன்னும் பார்க்கவில்லை – பொம்மன், பெள்ளி தம்பதி பேட்டி

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸில்  இடம்பெற்றுள்ள ஜோடி, அவர்கள் இடம்பெற்று ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தை அவர்கள் இன்னும் அதைப் பார்க்கவில்லை என கூறியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும்…

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸில்  இடம்பெற்றுள்ள ஜோடி, அவர்கள் இடம்பெற்று ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தை அவர்கள் இன்னும் அதைப் பார்க்கவில்லை என கூறியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி
பெற்ற யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் தாயைப் பிரிந்த ரகு, பொம்மி என்ற இரு
குட்டி யானைகள் என 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தாயைப் பிரிந்த இரு குட்டி யானைகளை பராமரித்து வந்த பாகன் பொம்மன், பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகளுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாகக் கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு உதகையில் பயின்று வந்த கார்த்திகள் கொன்சால்வஸ் என்ற பெண்மணி பொம்மன் அவரது மனைவி பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகள் இடையே கொண்டுள்ள பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் படம் தயாரித்து அப்படத்திற்கு எலிபெண்ட் விஸ்பர்ரஸ் (Elephant Whisperers) என பெயரிட்டு
youtube மற்றும் Net Flix OTT தளத்தின் மூலம் வெளியிட்டுப் பிரபலமாக்கியுள்ளார்.

ஆரம்பக் காலத்தில் வனவிலங்கு ஆர்வலர்கள், வனத்துறையினர், பாகன்கள் மத்தில்
பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த ஆவண படம் ஆஸ்கர் விருதிற்குத் தகுதி
பெற்றது. முதற்கட்டமாகச் சிறந்த வெளிநாட்டுப் படம், சிறந்த ஆவணப்படம் உட்பட 10
பிரிவுகளுக்கான பட்டியலை ஆஸ்கர் கமிட்டி வெளியிடப்பட்டது.

இதில் முதுமலையில் தாயை பிரிந்த இரண்டு குட்டி யானைகளுக்கும் அதன்
பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான பிணைப்பை சித்தரிக்கும் வகையில்
உருவாக்கப்பட்டு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்
ஆவண திரைப்படம் ஆஸ்கர் விருதிற்குத் தேர்வான நிலையில் இப்படம் சிறந்த ஆவன
குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால் குட்டி யானைகளைப் பராமரித்து
வந்த பழங்குடியினர்களான பொம்மன், பெள்ளி ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து
வருவது மட்டுமல்லாமல் வனத்துறையினர் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும்
பழங்குடியினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ரகு மற்றும் பொம்மி ஆகிய இரவு குட்டி யானைகளையும் தற்போது வேறு
பாகன்கள் பராமரித்து வரும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு முகாமில்
பராமரிக்கப்பட்டு வரும் ரகு மற்றும் பொம்மி யானைகளைக் கண்ட பெள்ளி அம்மாள் கண் கலங்கினார். இதனை அடுத்து ஆவணம் திரைப்படம் குறித்து பெள்ளி கூறுகையில்

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டபோது, ​​இரண்டு குட்டி யானைகளை மீட்க பொம்மன் தமிழ்நாட்டின் தருமபுரியின் அடர்ந்த காட்டிலிருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸிடம், யானைகளைப் பராமரிப்பதில் மும்முரமாக இருப்பதாகவும், ஆவணப்படத்தைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் ஆஸ்கர் பற்றி எனக்கு இன்னும் எதுவும் தெரியாது” என்றார். இது இந்தியாவுக்கு மிகவும் பெருமை சேர்த்தது என்று எல்லோரும் அவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், “இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று பொம்மன் தெரிவித்தார்.

40 நிமிட ஆவணப்படம் நீலகிரி மாவட்டம் முதுமலை காடுகளில் படமாக்கப்பட்டது. ரகுவையும், பின்னர் மூன்று மாத யானை அம்முவையும் தம்பதிகள் கவனித்துக் கொள்வதை இந்த ஆவணப்படம் படம் பிடிக்கிறது. படத்தின் தயாரிப்பின் போது தம்பதியினர் தங்கள் மகனை இழந்ததாகக் கூறப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.