பிரபல நடிகரின் காரில் மோதிய போதை இளைஞர் சீரியசாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரபல இந்தி நடிகர் ரஜத் பேடி. இவர் தமிழில் விஜயகாந்தின் ’கஜேந்திரா’ படத்தில் வில் லனாக நடித்துள்ளார். மும்பை அந்தேரியில் வசிக்கும் ரஜத் பேடி, நேற்று முன்தினம் தனது காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அந்தேரி சித்லாதேவி கோயில் அருகே வரும் போது, அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர், அவர் கார் மீது மோதினார்.
உடனடியாக காரை நிறுத்திய ரஜத், காயமடைந்தவரை மீட்டு ஹூப்பர் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, ரஜத் பேடியின் காரில் போதையில் வந்த ராஜேஷ் தூத் (39) என்ற இளைஞர் மோதியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருந் தாலும் நடிகர் ரஜத் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். காயமடைந்த ராஜேஷின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரஜத் பேடி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.








