நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. நாளொன்றுக்கு சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் அதிகப்படியான தொற்று பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்மூலம் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,875 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,114 பேர் குணமடைந்துள்ளனர். 369 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்த பாதிப்பானது 3,30,96,718 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3,91,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,22,64,051 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 4,41,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை 70,75,43,018 பேருக்கும், கடந்த 24 மணி நேரத்தில் 78,47,625 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.








