சீரியல் பார்த்தபடி டூ வீலர் ஓட்டியவருக்கு அபராதம்

கோவையில், செல்போனில் சீரியல் பார்த்துக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரை போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு போலீஸார் பிடித்து, அபராதம் விதித்தனர். கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தில் செல்போனில் சீரியல்…

கோவையில், செல்போனில் சீரியல் பார்த்துக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரை போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு போலீஸார் பிடித்து, அபராதம் விதித்தனர்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தில் செல்போனில் சீரியல் பார்த்துக் கொண்டு ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து போக்குவரத்து நுண்ணறிவுப் பிரிவு போலீசார், இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு நடத்திய விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் சீரியல் பார்த்துக்கொண்டு வாகனத்தை ஓட்டிய நபர் கோவை கணபதியைச் சேர்ந்த முத்துச்சாமி என்பதும் இவர் மசாலா நிறுவனமொன்றில் சேல்ஸ்மேன் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து முத்துசாமியை பிடித்த போலீசார், மோட்டார் வாகனச்சட்டததின்படி, அதிவேகமாக வாகனம் இயக்குதல், செல்போன் பயன்படுத்திக்கொண்டு வாகனம் இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.