அரக்கோணத்தில் மின்சார ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முதியவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் சாதுர்யமாகக் காப்பாற்றினர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (69). இவர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் நடைமேடை 7இல் இருந்த மின்சார ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, ரயில் நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புக் காவலர்கள் உடனடியாக நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு ரயில்வே ஊழியர்களை வரவழைத்து சாதுர்யமாக செயல்பட்டு காவல் துறை மற்றும் ரயில்வே ஊழியர்கள் முதியோரை பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதியவரின் உயிரைக் காப்பாற்றிய ஊழியர்கள் மகாலிங்கம், ஜிதேந்திர மீனா, பத்மநாபம் ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதையடுத்து, தற்கொலை முயற்சி குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் முதியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement: