முக்கியச் செய்திகள்

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றம்

முதுநிலை 2022 நீட் தேர்வு தேதியை மாற்றக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு தற்போது நடைபெறுவதால் இது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை நீட் 2022 தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 2022 நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 21 ஆம் தேதி  நடக்கும் தேர்வை மாற்றி வைக்க நாங்கள் எவ்வாறு கூற முடியும் என நீதிபதிகள் கேட்டனர்.

அப்போது மனுதாரர், தற்போது 2021க்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஒருவேளை இதில் இடம் கிடைக்காதவர்கள் 2022 நீட் தேர்வில் எழுத வாய்ப்பு உண்டு. ஆனால், தற்போதைய நிலையில் பல மாநிலங்கள் மே 12இல் கலந்தாய்வு நடத்தவுள்ளதால், மே 21இல் தேதி நடைபெறவுள்ள 2022 நீட் முதுநிலை தேர்வை மாற்றி வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சுமார் 2.6 லட்சம் மருத்துவர்கள் தேர்வுக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே தற்போதைய நிலையில் 2022 முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பு கூறியது. பதிவு செய்துள்ள பெரும்பாலானவர்கள் நீட் 2022 தேர்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்க விரும்புகின்றனர் மனுதாரர் தரப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் கூறினர். கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந ்த ஆண்டு அதிகம் பேர் முதுநிலை நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். தற்போதே காலம் தாழ்ந்துவிட்டது. இதற்கு மேல் காலம் தாழ்த்தக் கூடாது. ஏனெனில் அதிக அளவில் மருத்துவர்கள் தேவை உள்ளது. ஏன் மனுதாரர்கள் 2022 முதுநிலை நீட்டுக்கு விண்ணப்பிக்கவில்லை என மத்திய அரசு தரப்பு கேள்வி எழுப்பினர்.

தற்போது இவர்கள் 2021 முதுநிலை நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள். ஆனால், ஒருவேளை இவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் ஒரு ஆண்டுகால விரயம் ஏற்படும் என மனுதாரர் தரபப்பு கூறினர்.

மத்திய அரசு தரப்பு கூறுகையில், ஏற்கனவே காலம் கடந்துவிட்டது. மருத்துவர்கள் தேவை அதிகமாக உள்ளது. எனவே தற்போதைய நிலையில் நீதிமன்றம் முதுநிலை நீட் தேர்வு தேதியை மாற்றி உத்தரவிடக் கூடாது. ஏனெனில் கொரொனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் அனைத்துத் தேர்வுகளிலும் பலமாற்றம் ஏற்பட்டதால் academic பாதிக்கப்பட்டுள்ளது. இது தற்போது தான் மீண்டும் வரைமுறைக்குள் கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, நீதிமன்றம் எந்த மாற்று உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தெரிவித்தது.

நீதிபதிகள் உத்தரவு:

மே 21ஆம் தேதி முதுநிலை நீட் 2022 தேர்வு நடத்த தடையில்லை. முதுநிலை நீட் 2022 தேர்வு நடக்கும் தேதியில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பாணையின்படி, மே 21 ஆம் தேதி முதுநிலை நீட் 2022 தேர்வு நடைபெறும். முதுநிலை 2022 நீட் தேர்வு தேதியை மாற்றக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெசிடன்ட் மருத்துவர்களின் தேவையைக் கருதி இந்த மனுக்களை ஏற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்

Saravana Kumar

கோடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை

Saravana Kumar

தாயை கொலை செய்த 17 வயது சிறுமி

Arivazhagan CM