புதிய கல்விக்கொள்கை அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கினார். நிகழ்வில் பேசிய ஆளுநர், இந்த சந்தர்பத்தில் இன்று பட்டம் பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் வாழ்க்கையில் புதிய பொறுப்புகளை சந்திக்க இருக்கிறீர்கள், சவால்களை எதிர்கொள்ளாமல் வெற்றிகளை சந்திக்க முடியாது என தெரிவித்தார். மேலும், நம்நாடு புது நம்பிக்கையுடன் பயணிக்கிறது என குறிப்பிட்ட அவர், 75-வது சுதந்திரத்தில் என்ன சாதித்து இருக்கிறோம்? என்ன சாதிக்கவிருக்கிறோம்? என தெரிவித்த அவர், 100-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் போது நமது நாடு உலகுக்கு தலைமையாக இருக்கும் என தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘எட்டு வழி சாலையால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பது, தனது நிலைப்பாடு – இபிஎஸ்’
இதில், அனைத்து மாநில அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது என தெரிவித்த அவர், ஒவ்வொரு குடிமகனும் வறுமையின்றி, சுகாதரமான, நல்லகுடிநீர், மின்சாரம், கல்வி, உணவு பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்தார். கடந்த 7 வருடங்களில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரட்டிபாக்கபட்டுள்ளது என தெரிவித்த அவர், நமது நாடு தன்னிறைவு பெற்ற நாடாக மாற வேண்டும் என கூறினார்.
இந்த பயணத்தில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்த அவர், மத்திய அரசு மொழியை திணிக்கவில்லை என குறிப்பிட்டார். மேலும், புதிய கல்விக்கொள்கை அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.