கடந்த வெள்ளிக் கிழமை காலை ராம் சங்கர் பிந்த் என்பவர் நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றார். நாடாளுமன்றத்தின் எல்லைச் சுவரை ஒட்டிய ஒரு மரத்தில் ஏறி நாடாளுமன்றத்திற்குள் அவர் நுழைய முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து உளவுத் துறை உள்ளிட்ட அமைப்புகள் ராமிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் உத்தரப் பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அதிகாரிகள் ராமுக்கு எதிராக எந்த சந்தேகத்திற்கிடமான ஆதாரம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை .
மேலும் ராமிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் ராம் சங்கர் பிந்த் மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தோன்றியதாக தெரிவித்தனர். இதையடுத்து ராம் அவர் தந்தையிடம் ஒப்படைத்தனர்.







