கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாக்காங்குடி பகுதியில் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் அருண் ராஜ் (34). இவர் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை, குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நிலையில், பள்ளி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அருண்ராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







